
சன் ரைசர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான டேவிட் வார்னரின் தலைமையில் ஏற்கனவே சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்று இருந்தது. அதனை தொடர்ந்தும் கேப்டனாக செயல்பட்டு வந்த அவர் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் தொடர்ச்சியாக சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அவரை கடந்த தொடரின் பாதியிலேயே சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பதவியில் இருந்து அவரை நிர்வாகம் நீக்கியது.
அதனைத்தொடர்ந்து விளையாடும் பிளேயிங் லெவனிலும் அவருக்கு இடமளிக்காத சன்ரைசர்ஸ் அணி அவருக்கு பதிலாக ஜேசன் ராய்-க்கு வாய்ப்பளித்தது. இதனால் வெளியில் அமர்ந்து இருந்த டேவிட் வார்னர் அணிக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் நிச்சயம் அவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாட மாட்டார் என்று கூறப்பட்டது. மேலும் ஐபிஎல் தொடரை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது மட்டுமின்றி தொடர்நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.