
Mystery Girl Captured Eyes In The Brabourne Stadium During DC-KKR Match (Image Source: Google)
மும்பையில் தில்லி - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பின்போது ஒரு பெண்ணை மட்டும் கேமரா அடிக்கடி படம்பிடித்தது. அந்தப் பெண் கேகேஆர் அணிக்குத் தன் ஆதரவைத் தெரிவித்துக் கொண்டிருந்தார்.
இவர் யார், இவரை ஏன் தொலைக்காட்சியில் அடிக்கடிக் காண்பிக்கிறார்கள் எனச் சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பினார்கள். எல்லோரும் ஐபிஎல் ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது கேமராமேனின் கவனம் மட்டும் அந்தப் பெண்ணின் மீது இருந்ததாக மீம்களும் வெளியாகின.
ரசிகர்களைக் கவர்ந்த அந்தப் பெண் நடிகை ஆர்த்தி பேடி என்பது பிறகு தெரியவந்தது. ஆர்த்தி பேடி, ஏராளமான விளம்பரப் படங்களில் நடித்துள்ளார்.