
Namibia won their match and beat the Scottish by 5 wickets with 14 balls remaining (Image Source: Google)
சம்மர் பிக் பேஷ் டி20 தொடரில் இன்று ஸ்காட்லாந்து - நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற நமீபியா அணி பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி பெர்ரிங்டனின் அதிரடியான அரைசதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக பெர்ரிங்டன் 61 ரன்களைச் சேர்த்தார்.
இதையடுத்து களமிறங்கிய நமீபியா அணியின் தொடக்க வீரர் ஸான் கிரீன் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்டீபன் பார்ட் - கிரேக் வில்லியம்ஸ் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது.