
Nathan Lyon registers his 400th scalp in Test cricket (Image Source: Google)
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் இரு அணிகளுக்கு இடையே கபா மைதானத்தில் நடைபெற்று வந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் நாதன் லையன், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெற்றிக்கு உதவினார்.