Advertisement

ஷிகர் தவான் உள்ளிட்ட 35 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு!

விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகள் வழங்கும் விழா வரும் 13ஆம் தேதி டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan November 03, 2021 • 11:54 AM
 National Sports Awards Full List Out; Mithali Raj Gets Major Dhyan Chand Khel Ratna, Arjuna to Shik
National Sports Awards Full List Out; Mithali Raj Gets Major Dhyan Chand Khel Ratna, Arjuna to Shik (Image Source: Google)
Advertisement

விளையாட்டுத் துறையில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளை மத்திய விளையாட்டு அமைச்சகம் ஆண்டுதோறும் மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான விருது பட்டியலை மத்திய விளையாட்டு அமைச்சகம் நேற்று வெளியிட்டது. விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் அர்ஜூனா விருதுக்கு 35 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு விருதுடன் ரூ.15 லட்சம் ரொக்கப்பரிசும் கிடைக்கும்.

Trending


இதில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் தவானுக்கும் அர்ஜுனா விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ளவர்களின் பெயர் விவரம் வருமாறு:-

Also Read: T20 World Cup 2021

அர்பிந்தர்சிங் (தடகளம்), சிம்ரன்ஜித் கவுர் (குத்துச்சண்டை), ஷிகர் தவான் (கிரிக்கெட்), பவானி தேவி (வாள்சண்டை), மோனிகா, வந்தனா கட்டாரியா (இருவரும் ஹாக்கி), சந்தீப் நார்வால் (கபடி), ஹிமானி உத்தம் பராப் (மல்லர்கம்பம்), அபிஷேக் வர்மா (துப்பாக்கி சுடுதல்), அங்கிதா ரெய்னா (டென்னிஸ்), தீபக் பூனியா (மல்யுத்தம்), தில்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங், ருபிந்தர்பால் சிங், சுரேந்தர் குமார், அமித் ரோஹிதாஸ், பிரேந்திர லக்ரா, சுமித், நீல கண்ட ஷர்மா, ஹர்திக் சிங், விவேக் சாகர், குர்ஜந்த்சிங், மன்தீப்சிங், ஷம்சிர் சிங், லலித்குமார் உபாத்யாய், வருண் குமார், சிம்ரன்ஜித் சிங் (16 பேரும் ஹாக்கி) யோகேஷ் கதுனியா, நிசாத் குமார், பிரவீன்குமார், ஷரத் குமார் (4 பேரும் பாரா தடகளம்), சுஹாஸ் யதிராஜ் (பாரா பேட்மிண்டன்), சிங்கராஜ் அதானா (பாராதுப்பாக்கி சுடுதல்), பவினா பட்டேல் (பாரா டேபிள் டென்னிஸ்), ஹர்விந்தர் சிங் (பாரா வில்வித்தை).


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement