Advertisement

தேசிய கிரிக்கெட் அகாதமியின் தலைவர் பதவிக்கான விண்ணப்ப தேதி நீட்டிப்பு!

தேசிய கிரிக்கெட் அகாதமியின் தலைவர் பதவிக்கு ராகுல் டிராவிட் மட்டுமே விண்ணப்பித்துள்ளதால், காலக்கெடுவை நீட்டித்துள்ளது பிசிசிஐ.

Bharathi Kannan
By Bharathi Kannan August 18, 2021 • 22:36 PM
NCA's Head of Cricket post, BCCI extends deadline
NCA's Head of Cricket post, BCCI extends deadline (Image Source: Google)
Advertisement

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேசிய கிரிக்கெட் அகாதமியின் தலைவராக ராகுல் டிராவிட் உள்ளார். இவரது இரண்டு ஆண்டு பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, அப்பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என பிசிசிஐ அறிவித்தது. மேலும் இதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 15 என்றும் தெரிவித்திருந்தது.

ஆனால் இப்பதவிக்கு முன்னால் தலைவரான ராகுல் டிராவிட்டை தவிர்த்து மற்ற யாரும் விண்ணப்பிக்கவில்லை. இதனால் விண்ணப்பம் அனுப்புவதற்கான காலக்கெடுவை மேலும் சில நாட்களுக்கு பிசிசிஐ நீட்டித்துள்ளது.

Trending


டி20 உலகக்கோப்பையுடன் ரவி சாஸ்திரி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். அந்த பதவிக்கு ராகுல் டிராவிட் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இப்படியிருக்கும் நிலையில் அவர் வகித்து வரும் பதவிக்கு யாருமே விண்ணப்பம் செய்யாமல் இருக்கும் நிலையில், இப்பதவியில் யார் அமர்த்தப்படுவார் என்றசிக்கல் ஏற்பட்டுள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement