Advertisement

NED vs IRE, 2nd ODI: நெதர்லாந்தை பந்தாடிய அயர்லாந்து!

நெதர்லாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan June 05, 2021 • 14:25 PM
NED vs IRE, 2nd ODI: Ireland won the match by 8 wickets and get the series level 1-1
NED vs IRE, 2nd ODI: Ireland won the match by 8 wickets and get the series level 1-1 (Image Source: Google)
Advertisement

நெதர்லாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. 

அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு மேக்ஸ் ஓடவுட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்து ரன் கணக்கை உயர்த்தினார். பின்னர் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மேக்ஸ் ஓடவுட் ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீரர்களும் எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

Trending


இதனால் 49.2 ஓவர்களிலேயே நெதர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் சேர்த்தது. அயர்லாந்து அணி தரப்பில் கிரேக் யங், ஜோசுவா லிட்டில் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். 

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி அளிக்கும் வகையில் வில்லியம் போட்டர்ஃபீல்ட் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். 

அதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த பால் ஸ்டிர்லிங் - கேப்டன் பால்பிர்னி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தவிர்த்தனர். இதில் பால் ஸ்டிர்லிங் அரைசதம் கடந்து அசத்தினார். 

பின்னர் 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டிர்லிங் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இருப்பினும் மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் பால்பிர்னி அரைசதம் கடந்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். 

இதன் மூலம் அயர்லாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் அயர்லாந்து அணி சமன் செய்துள்ளது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement