Advertisement

NED vs PAK, 1st ODI: பரபரப்பான ஆட்டத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்!

நெதர்லாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan August 16, 2022 • 23:00 PM
NED vs PAK, 1st ODI: Netherlands fight hard but fall short by 16 runs!
NED vs PAK, 1st ODI: Netherlands fight hard but fall short by 16 runs! (Image Source: Google)
Advertisement

நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி ரோட்டர்டேமில் நடைபெறுகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் இமாம் உல் ஹக் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

Trending


பின்னர் ஜோடி சேர்ந்த ஃபகர் ஸமான் - கேப்டன் பாபர் ஆசாம் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினார்.

அதன்பின் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் ஆசாம் 74 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் பொறுப்பான ஆட்டததை வெளிப்படுத்திய ஃபகர் ஸமான் சதமடித்து மிரட்டினார். அதன்பின் 109 ரன்களில் அவரும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

பின்னர் களமிறங்கிய முகமது ரிஸ்வான் 14, குஷ்டில் ஷா 21 என விக்கெட்டுகளை இழந்து நடையைக் கட்டினர். அதன்பின் களமிறங்கிய ஷதாப் கான் - அகா சல்மான் இறுதியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.

இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சதாப் கான் 48 ரன்களுடனும், அகா சல்மான் 27 ரன்களையும் சேர்த்தனர்.

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய நெதர்லாந்து அணியில் மேக்ஸ் ஓடவுட், வெஸ்லி பர்ரெஸி, பாஸ் டி லீட் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த விக்ரம்ஜிட் சிங் - டாம் கூப்பர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.

இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். பின் 65 ரன்களில் விக்ரம்ஜித் சிங்க்கும், டாம் கூப்பர் 65 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து களமிறங்கிய ஸ்காட் எட்வர்ட்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.

ஆனாலும் ஒருமுனையில் சிறப்பாக விளையாடிய எட்வர்ஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். ஆனாலும் 50 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்காட் எட்வர்ட்ஸ் 71 ரன்களைச்சேர்த்தார்.

பாகிஸ்தான் அணி தரப்பில் ஹாரிஸ் ராவூஃப், நசீம் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement