
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டி வருகிறது. இங்கிலாந்திலுள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் ஜூன் 18ஆம் தேதி இப்போட்டி நடைபெறுகிறது.
இப்போட்டிகாக இந்திய அணி வீரர்கள் இரு குழுக்களாக பிரிந்து தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டுமேயான தங்களது 100 விழுக்காடு திறனையும் வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஷமி, நியூசிலாந்து அணிக்கெதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதி போட்டியை வெல்வதற்கு நாங்கள் 100 விழுக்காடு எங்கள் திறனை வெளிப்படுத்துவோம். ஏன் 110 விழுக்காட்டையும் கூட நாங்கள் வெளிப்படுத்த வேண்டியது அவசியம். இதுவே எங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும் என்று தெரிவித்துள்ளார்.