
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரானது கடந்த 17ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆரம்பத்தில் தகுதி சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் அந்த தகுதிச்சுற்றில் தேர்ச்சி அடைந்த 4 அணிகள் தற்போது சூப்பர் 12 சுற்றுக்கு நுழைந்துள்ளனர்.
அப்படி விளையாடிய அணிகளில் நெதர்லாந்து மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்து சூப்பர் 12- சுற்றில் விளையாடும் வாய்ப்பை தவற விட்டது. இதன் காரணமாக அந்த அணி இந்த உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. அதைத் தொடர்ந்து தற்போது இன்று முதல் சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்த உலக கோப்பை தொடரில் நெதர்லாந்து அணியின் அடுத்தடுத்து தோல்வியால் வருத்தமடைந்த அந்த அணியின் சீனியர் ஆல்ரவுண்டரான ரியான் டென் டெஸ்காத்தே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.