
Netherlands' Ben Cooper announces retirement from international cricket aged 29 (Image Source: Google)
நெதர்லாந்து அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்தவர் பென் கூப்பர். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு நெதர்லாந்துக்காக அறிமுகமாகி தனது அதிரடியான ஆட்டத்தினால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இதுவரை 13 ஒருநாள், 58 டி20 போட்டிகளில் நெதர்லாந்துக்காக விளையாடியுள்ள பென் கூப்பர் ஆயிரத்திற்கு அதிகமான ரன்களைச் சேர்த்துள்ளார்.
தற்போது 29 வயதாகும் பென் கூப்பர், இன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.