Netherlands Captain Pieter Seelar Announces Retirement From International Cricket (Image Source: Google)
நெதர்லாந்து அணியின் கேப்டனாக செயல்பட்டுவந்தவர் பீட்டர் சீலர். தற்போது 34 வயதான பீட்டர் சீலார் 2006 முதல் நெதர்லாந்து அணிக்காக விளையாடி வருகிறார். ஆல்ரவுண்டராக அணியில் முக்கிய பங்காற்றினார்.
மேலும் 57 ஒருநாள் போட்டியில் விளையாடி 57 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 77 போட்டிகளில் விளையாடி 58 விக்கெட்டுகளை எகானமி 6.83 என்ற விதத்தில் சிறப்பாக பந்து வீசியுள்ளார். பேட்டிங்கில் 591 ரன்களையும் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 96 ரன்களை எடுத்துள்ளார்.
2009, 2014 டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணியை தோற்கடித்த நெதர்லாந்து அணியில் இடம் பெற்றவர் சீலார் என்பது குறிப்பிடத்தக்கது.