
Netherlands has won the toss and will bat first (Image Source: Google)
அயர்லாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நெதர்லாந்து சென்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி உட்ரெக்ட்டில் உள்ள ஸ்போர்ட் பார்க் மார்ஷல் கர்வீர்ட் மைதானத்தில் இன்று (ஜூன் 2) நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி கேப்டன் பீட்டர் சீலர் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்துள்ளார். இதுவரை இரு அணிகளும் 10 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.
அதில் அயர்லாந்து அணி 7 முறையும், நெதர்லாந்து அணி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.