Advertisement
Advertisement
Advertisement

ZIM vs NED, 1st ODI: ஜிம்பாப்வேவை 249 ரன்களில் சுருட்டியது நெதர்லாந்து!

நெதர்லாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 249 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

Bharathi Kannan
By Bharathi Kannan March 21, 2023 • 16:41 PM
Netherlands restricted Zimbabwe by 249 runs!
Netherlands restricted Zimbabwe by 249 runs! (Image Source: Google)
Advertisement

ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நெதர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது போட்டி இன்று நடைபெறுகிறது. 

ஹராரேவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நெதர்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்து ஜிம்பாப்வே அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. மேலும் இத்தொடர் உலகக்கோப்பை குவாலிஃபையர் லீக் போட்டிகளாக நடைபெறவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருந்தன.

Trending


அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் கிரேக் எர்வின், கேரி பேலன்ஸ், இன்னசெண்ட் கையா, வெஸ்லி மதெவேரெ, சிக்கந்தர் ரஸா, ரியான் பர்ல் என நட்சத்திர வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடைடைக் கட்டினர். 

இதையடுத்து வந்த கிளைவ் மடாண்டே மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 74 ரன்களில் மடாண்டேவும் விக்கெட்டை இழக்க, அவருக்கு துணையாக விளையாடி வந்த மஸகட்ஸா 34, ரிச்சர்ட் ங்காரவா 35 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்தனர். 

இதனால் 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஜிம்பாப்வே அணி 249 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நெதர்லாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஃபிரெட் கிளாசென் 3 விக்கெட்டுகளையும், பால் வான் மீகெரன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement