Advertisement

நெதர்லந்து vs அயர்லாந்து, இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

அயர்லாந்து - நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி உட்ரெக்ட்டில் உள்ள ஸ்போர்ட் பார்க் மார்ஷல் கர்வீர்ட் மைதானத்தில் நாளை (ஜூன் 4) நடைபெறுகிறது

Advertisement
Netherlands vs Ireland, 2nd ODI – Prediction, Fantasy XI Tips & Probable XI
Netherlands vs Ireland, 2nd ODI – Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 03, 2021 • 02:24 PM

அயர்லாந்து அணி, நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் நெதர்லாந்து அணி ஒரு ரன் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.

Bharathi Kannan
By Bharathi Kannan
June 03, 2021 • 02:24 PM

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி உட்ரெக்ட்டில் உள்ள ஸ்போர்ட் பார்க் மார்ஷல் கர்வீர்ட் மைதானத்தில் நாளை (ஜூன் 4) நடைபெறுகிறது.

Trending

போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிகள் : அயர்லாந்து vs நெதர்லாந்து
  • இடம் : ஸ்போர்ட் பார்க் மார்ஷல் கர்வீர்ட், உட்ரெக்ட்
  • நேரம் : மதியம் 2 மணி

போட்டி முன்னோட்டம்

நெதர்லாந்து அணி

அயர்லாந்து அணியுடனான நேற்றைய போட்டியில் நெதர்லாந்து அணி பேட்ஸ்மேன்கள் சொதப்பினாலும், பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டனர். இதன் காரணமாகவே நேற்றைய ஆட்டத்தில் நெதர்லாந்து அணியால் அயர்லாந்தை வீழ்த்த முடிந்தது. 

இருப்பினும் இதே நிலை நீடித்தால் நெதர்லாந்து அணி தொடரை இழக்கும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகும். 

அயர்லாந்து அணி

நேற்றைய போட்டியில் அயர்லாந்து அணியும் அதே தவறை தான் செய்திருந்தது. பந்து வீச்சாளர்கள் தங்களது பணியை சிறப்பாக செய்து ரன் கணக்கை கட்டுப்படுத்தினாலும், பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது அணியின் தோல்விக்கு வழிவகுத்தது. 

அந்த அணியின் அனுபவ வீரர் பால் ஸ்டிர்லிங் அரைசதம் அடித்திருந்தாலும், அவர் 110 பந்துகளை விணடித்ததும் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இதானல் நாளை போட்டியில் தவறுகளை திருத்திக்கொண்டு அயர்லாந்து அணி செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உத்தேச அணி

நெதர்லாந்து - மேக்ஸ் ஓடவுட், ஸ்டீபன் மைபர்க், பென் கூப்பர், பீட்டர் சீலார் (கே), ஸ்காட் எட்வர்ட்ஸ், பாஸ் டி லீட், லோகன் வான் பீக், சாகிப் சுல்பிகர், பிராண்டன் குளோவர், டிம் வான் டெர் குக்டன், பிரெட் கிளாசென்.

அயர்லாந்து - பால் ஸ்டிர்லிங், வில்லியம் போர்ட்டர்ஃபீல்ட், ஆண்ட்ரூ பால்பிர்னி (கே), ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர் , சிமி சிங், ஜார்ஜ் டோக்ரெல், கிரேக் யங், ஆண்டி மெக்பிரைன், ஜோசுவா லிட்டில், பாரி மெக்கார்த்தி. 

ஃபேண்டஸி லெவன்

  • லோர்கன் டக்கர் - விக்கெட் கீப்பர்கள்
  • பேட்ஸ்மேன்கள் - மேக்ஸ் ஓ டவுட், ஸ்டீபன் மைபர்க், வில்லியம் போர்ட்டர்ஃபீல்ட், பால் ஸ்டிர்லிங் 
  • ஆல்ரவுண்டர்கள் - பீட்டர் சீலார், ஜார்ஜ் டோக்ரெல், சிமி சிங்
  • பந்து வீச்சாளர்கள் - லோகன் வான் பீக், டிம் வான் டெர் குக்டன், ஜோசுவா லிட்டில்

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement