
டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றின் 41ஆவது ஆட்டத்தில் இன்று பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதிக்குள் நுழையும். இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அந்த அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.
போட்டியில் 10ஆவது ஓவரை ஷதாப் கான் வீசினார். 10.4 ஓவரில் ஷதாப் கான் வீசிய பந்தில்20 ரன் எடுத்திருந்த சௌமியா சர்கார் கேட்ச் மூலம் ஆட்டமிழந்தார். அந்த நிலையில் வங்காளதேச அணி 2 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்த நிலையில் இருந்தது.
இதையடுத்து, அடுத்த விக்கெட்டிற்கு வங்கதேச கேப்டன் ஷாகீப் அல் ஹசன் களமிறங்கினார். அவர் ஷதாப் கான் வீசிய பந்தை எதிர்க்கொண்டார். ஷாகீப் முதல் பந்தை எதிர்க்கொண்ட நிலையில் அதில் எல்.பி.டபுள்யூ முறையில் அவுட் ஆனார்.