ஐபிஎல் 2022: சிஎஸ்கேவின் பலவீனம் என்ன என்பது எனக்கு தெரியும் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
சிஎஸ்கே அணியில் இதற்கு முன்பு விளையாடியதால் அந்த அணியின் பலம், பலவீனம் தனக்குத் தெரியும் என ஆர்சிபி அணியின் கேப்டன் டு பிளெஸ்சிஸ் கூறியுள்ளார்.
ஐபிஎல் 2021 போட்டிக்குப் பிறகு ஆர்சிபி அணி கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகினார். ஆர்சிபி அணி இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. விராட் கோலி தலைமையில் 2016-ல் ஆர்சிபி அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
கடந்த வருடம் சிஎஸ்கே அணியில் விளையாடிய ஃபாஃப் டு பிளெஸ்சிஸ், இந்தமுறை ஆர்சிபி அணிக்குத் தேர்வானார். பிறகு அந்த அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
Trending
2021 போட்டியில் சிஎஸ்கேவில் விளையாடிய டு பிளெஸ்சிஸ், 16 ஆட்டங்களில் 633 ரன்கள் எடுத்தார். ஐபிஎல் ஏலத்தில் டு பிளெஸ்சிஸ்ஸை ரூ. 7 கோடிக்குத் தேர்வு செய்து சென்னை ரசிகர்களை வேதனைப்படுத்தியது ஆர்சிபி அணி.
இந்நிலையில் மும்பையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் பற்றி டு பிளெஸ்சிஸ் கூறியதாவது:
அடிப்படையில் எல்லா சிஎஸ்கே வீரர்களைப் பற்றியும் எனக்குத் தெரியும். அதேசமயம் அவர்களுக்கும் என்னைப் பற்றியும் என் ஆட்டத்தைப் பற்றியும் நன்குத் தெரியும். இதனால் இரு தரப்பிலும் இது சமமாகவே உள்ளது. அதேசமயம் சிஎஸ்கே வீரர்களின் பலம், பலவீனங்கள் பற்றியும் அறிந்திருப்பது ஆட்டத்தின்போது ஓரளவு உதவும். இரு பலம் பொருந்திய அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் விளையாட ஆர்வமாக உள்ளேன் என்றார்.
Win Big, Make Your Cricket Tales Now