18 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து!
வரவுள்ள செப்டம்பர் மாதம் நியூசிலாந்து அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
நடப்பாண்டு இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடர், கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இத்தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பாகிஸ்தான் அணியும் தற்போது இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுடன் டி20 தொடர்களில் விளையாடியது. அதேசமயம் நியூசிலாந்து அணியும், அடுத்த மாதம் வங்கதேசம் சென்று 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.
Trending
இந்நிலையில், வருகிற செப்டம்பர் மாதாம் பாகிஸ்தான் அணிக்கெதிராக 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து விளையாடும் என்றும், இதில் ஒருநாள் போட்டிகள் ராவல் பிண்டி கிரிக்கெட் மைதானத்திலும், டி20 போட்டிகள் லாகூரிலுள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
இதன் மூலம் 18 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் - நியூசிலாந்து தொடர் அட்டவணை
- முதல் ஒருநாள் - செப்டம்பர் 17 - ராவல்பிண்டி
- இரண்டாவது ஒருநாள் - செப்டம்பர் 19 - ராவல்பிண்டி
- மூன்றாவது ஒருநாள் - செப்டம்பர் 21 - ராவல்பிண்டி
- முதல் டி20 - செப்டம்பர் 25 - கடாஃபி
- இரண்டாவது டி20 - செப்டம்பர் 26 - கடாஃபி
- மூன்றாவது டி20 - செப்டம்பர் 29 - கடாஃபி
- நான்காவது டி20 - அக்டோபர் 1 - கடாஃபி
- ஐந்தாவது டி20 - அக்டோபர் 3 - கடாஃபி
Win Big, Make Your Cricket Tales Now