
New Zealand Announces 15-Man Squad For WTC Final Against India, Mitchell Santner Snubbed (Image Source: Google)
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் ஜூன் 18ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான விராட் கோலி தலைமையிலான 24 பேர் அடங்கிய இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
அதேசமயம் நியூசிலாந்து அணி, இங்கிலாந்து அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி, டெஸ்ட் தொடரை 1-0 என நியூசிலாந்து வென்றுள்ளது.
இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் மீண்டும் இடம்பெற்றுள்ளார்.