
New Zealand captain Kane Williamson to make Test return against England (Image Source: Google)
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சென்று 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் ஜூன் 2ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 20 பேர் கொண்ட அணியில் கேப்டன் வில்லியம்சன் மீண்டும் திரும்பியுள்ளார்.
சுழற்பந்து வீச்சாளர் அஜிஸ் பட்டேல், ஆல்ரவுண்டர்கள் ரக்சின் ரவீந்திரா, பிரேஸ்வெல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். புதுமுக வீரர்கள் 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.