WTC: தண்டாயுதத்துடன் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நியூசிலாந்து!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான தண்டாயுதத்துடன் நியூசிலாந்து கிரிக்கெட் அணி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி கடந்த ஜூன் 18ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்றது. தொடர் மழை காரணமாக ஆறுநாள் நீடித்த இப்போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன்பட்டத்தைத் தட்டிச்சென்றது.
மேலும் இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான தண்டாயுதமும் வழங்கப்பட்டது.
Trending
இந்நிலையில், நியூசிலாந்து அணி கைப்பற்றிய இரண்டாவது ஐசிசி கோப்பை இது என்பதால், இதனைக் கொண்டாடும் விதமாக ஒரு வாரம் தண்டாயுதத்துடன் நியூசிலாந்து அணி நாடுமுழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது.
இச்சுற்றுப்பயணத்தின் போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தண்டாயுதம் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்த படவுள்ளதாகவும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக அதிகளவிலான மக்கள் கூடுவதையும், வீரர்கள் மற்றும் அணி ஊழியர்களின் பாதுக்காப்பையும் கருத்தில் கொண்டு வெகுசில மக்களுக்கு மட்டுமே இதில் அனுமதி வழங்க இருப்பதாகவும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
அதன்படின் ஜூலை 26ஆம் தேதி ஆக்லாந்தில் தொடங்கும் இந்த சுற்றுப்பயணம், இன்வர்கர்கிலில் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now