Advertisement

இனியாவது எங்கள் நிலை மாறுமா? - நியூசிலாந்து அணி குறித்து டிம் சௌதி!

டெஸ்ட் உலக சாம்பியனான நியூசிலாந்து அணி மிகக்குறைந்த டெஸ்டுகளில் விளையாடி வருகிறது. இந்த நிலைமை இனியாவது மாற வேண்டும் என நியூசிலாந்து வீரர் டிம் செளதி கூறியுள்ளார்.

Advertisement
New Zealand Has Right To Play Longer Test Series, Says Tim Southee
New Zealand Has Right To Play Longer Test Series, Says Tim Southee (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 28, 2021 • 04:36 PM

கடந்த 5 வருடங்களில் நியூசிலாந்து அணி, மூன்று டெஸ்டுகளுக்கு மேல் எந்த ஒரு டெஸ்ட் தொடரிலும் விளையாடியதில்லை. அதுவும் கூட 18 டெஸ்ட் தொடர்களில் நான்கு தொடர்களில் மட்டுமே மூன்று டெஸ்டுகளை விளையாடியுள்ளது. மற்றதெல்லாம் இரு டெஸ்டுகள் கொண்ட தொடர்கள் தான். 

Bharathi Kannan
By Bharathi Kannan
June 28, 2021 • 04:36 PM

அதேசமயம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோற்ற இந்திய அணி, கடந்த 5 வருடங்களில் விளையாடிய 18 டெஸ்ட் தொடர்களில் 12 தொடர்கள் குறைந்தது மூன்று டெஸ்டுகளைக் கொண்டிருந்தன. இதில் சில தொடர்களில் ஐந்து, நான்கு டெஸ்டுகளும் இடம்பெற்றிருந்தன. 

Trending

நியூசிலாந்து அணி டெஸ்ட் உலக சாம்பியன் ஆகிவிட்டதால் இனிமேலாவது நிலைமை மாற வேண்டும் என நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் செளதி கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய சௌதி,“எங்கள் முன் வைக்கப்படும் சவால்களைச் சிறப்பாக எதிர்கொள்கிறோம். அதிக டெஸ்டுகளில் விளையாடினால் நன்றாகவே இருக்கும். மூன்று ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர்களை அந்தளவுக்கு நாங்கள் விளையாடுவதில்லை. எனவே இனிமேலாவது இரு டெஸ்டுகள் கொண்ட தொடர்களை விடவும் அதிகமான மூன்று டெஸ்டுகளைக் கொண்ட தொடர்களில் நாங்கள் விளையாட வேண்டும். 

டெஸ்ட் அட்டவணையைத் தயாரித்து முடித்த நிலையில் இப்போது இந்தக் கோரிக்கையை அமல்படுத்துவது கடினம் தான். ஆனால் அதிக டெஸ்டுகளில் விளையாடுவதற்கான உரிமையை நாங்கள் பெற்றுள்ளோம். மூன்று டெஸ்டுகள் கொண்ட தொடர்களில் விளையாடுவது சவால் அளிக்கக்கூடியது” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement