WTC final: சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைப்போம் - ட்ரெண்ட் போல்ட்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி புதிய வரலாறு படைக்க விரும்புகிறோம் என்று நியூசிலாந்து வேகப்பந்து வீரர் ட்ரெண்ட் போல்ட் கூறியுள்ளார்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் கடந்த 2019ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்டன் நகரில் வருகிற ஜூன்18ஆம் நடக்கிறது. இதில் விராட் கோலி தலைமையிலான இந்தியா அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி புதிய வரலாறு படைக்க விரும்புகிறோம் என்று நியூசிலாந்து வேகப்பந்து வீரர் ட்ரெண்ட் போல்ட் கூறியுள்ளார்.
Trending
இதுகுறித்து பேசிய போல்ட்,“நியூசிலாந்து அணி சொந்த மண்ணிலும், உலகின் பல இடங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதை பார்க்கும் போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்திலும் புதிய வரலாறு படைக்கும் தகுதி நியூசிலாந்துக்கு உள்ளது என்று நான் நம்புகிறேன்.
இந்த போட்டியில் பங்கேற்க இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் ஐபிஎல் தொடரின் எஞ்சிய ஆட்டங்களில் வாய்ப்பு கிடைத்தால் மும்பை அணிக்காக மீண்டும் களம் இறங்குவேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னதாக நியூசிலாந்து அணி இங்கிலாந்துடன் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி லண்டனில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற உள்ள நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now