
New Zealand Opener Colin Munro Rejoins Perth Scorchers In Big Bash League (Image Source: Google)
நியூசிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர் காலின் முன்ரோ. இவர் நடப்பு சீசன் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிவந்தார்.
இந்நிலையில், வருகிற டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான பிக் பேஷ் லீக் டி20 தொடரின் 11ஆவது சீசன் தொடங்கவுள்ளது. இதையடுத்து இத்தொடருக்கான அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக பிபிஎல் அணிகளில் ஒன்றான பெர்த் ஸ்காச்சர்ஸ் அணியில் காலின் முன்ரோ மீண்டும் இணைந்துள்ளார்.