
New Zealand Squad Returns To Auckland After Abandoning Pakistan Tour (Image Source: Google)
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் நடைபெற இருந்தது. மேலும் 18 ஆண்டுகளுக்கு பிற்கு நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்ததால், இத்தொடரின் மீதான எதிர்பர்ப்புகள் அதிகரித்திருந்தது.
இந்நிலையில் செப்டம்பர் 17ஆம் தேதி ராவல்பிண்டியில் நடைபெற இருந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக, நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் பாதுகாப்பு காரணங்களுக்காக இத்தொடரை ரத்து செய்வதாக அறிவித்தது.
இதனால் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நியூசிலாந்தின் இச்செயல் குறித்து விசாரிக்க ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகாரளித்துள்ளது.