-mdl.jpg)
New Zealand To Play Two Tests And White-Ball Series In Pakistan (Image Source: Google)
நியூசிலாந்து அணி இந்த வருட டிசம்பர் இறுதியிலும் ஜனவரி தொடக்கத்திலும் பாகிஸ்தானில் இரு டெஸ்டுகளிலும் அதே ஜனவரியில் 3 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.
அதன்பிறகு ஐபிஎல் நடைபெறும் ஏப்ரல், மே மாதங்களில் பாகிஸ்தானுக்கு மீண்டும் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் நியூசிலாந்து அணி விளையாடவுள்ளது.
கடந்த செப்டம்பர் 2021ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் ஒருநாள் தொடரை ரத்து செய்த காரணத்தால் அதை ஈடு கட்டும் விதமாக ஏப்ரல், மே மாதங்களில் மீண்டும் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது நியூசிலாந்து அணி.