நியூசிலாந்து vs இந்தியா, 3ஆவது ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நியூசிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை ஹாமில்டனில் நடைபெறுகிறது.
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
3 ஒருநாள் போட்டி தொடரில் ஆக்லாந்தில் நடந்த முதல் ஆட்டத்தில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. ஹேமில்டனில் நடந்த 2-வது போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.
Trending
இந்நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹாமில்டனில் உள்ள செடன் பார்க் மைதானத்தில் நாளை நடக்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இந்தியாவுக்கு உள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - நியூசிலாந்து vs இந்தியா
- இடம் - செடன் பார்க், ஹாமில்டன்
- நேரம் - காலை 7 மணி
போட்டி முன்னோட்டம்
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், ஷுப்மன் கில் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். மேலும் முதல் போட்டியில் நன்றாக ஆடி 38 பந்தில் 36 ரன்கள் அடித்த சஞ்சு சாம்சன், 2வது போட்டியில் நீக்கப்பட்டு 6வது பவுலிங் ஆப்சன் தேவை என்பதற்காக தீபக் ஹூடா சேர்க்கப்பட்டார்.
ஆனால் ரிஷப் பண்ட் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்புவதால், கடைசி போட்டியில் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியில் ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் ஆடலாம். அந்த ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட வாய்ப்புள்ளது. மற்றபடி வேறு எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது. பந்து வீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வீரர்கள் தேர்வில் மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது.
வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணியில் டாம்லாதம், கேப்டன் வில்லியம்சன், ஃபின் ஆலன், டெவான் கான்வே, டிம் சவுத்தி, ஹென்றி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
இதனால் இப்போட்டியில் வெற்றிபெற்று டி20 தொடரில் அடைந்த தோல்விக்கு ஒருநாள் தொடரை கைப்பற்றி நியூசிலாந்து அணி பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 112
- இந்தியா - 55
- நியூசிலாந்து - 50
- முடிவில்லை - 6
- டிரா - 1
உத்தேச லெவன்
நியூசிலாந்து - ஃபின் ஆலன், டெவன் கான்வே, கேன் வில்லியம்சன் (கே), டேரில் மிட்செல், டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், மைக்கேல் பிரேஸ்வெல், மாட் ஹென்றி, டிம் சவுத்தி, லாக்கி ஃபர்குசன்.
இந்தியா - ஷிகர் தவான் (கே), ஷுப்மான் கில், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த்/ சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
Win Big, Make Your Cricket Tales Now