Advertisement
Advertisement
Advertisement

நியூசிலாந்து vs அயர்லாந்து, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

டி20 உலகக்கோப்பை: அடிலெய்டில் நாளை நடைபெறும் சூப்பர் 12 ஆட்டத்தில் நியூசிலாந்து - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan November 03, 2022 • 22:04 PM
New Zealand vs Ireland, T20 World Cup, Super 12 - NZ vs IRE Cricket Match Prediction, Where To Watch
New Zealand vs Ireland, T20 World Cup, Super 12 - NZ vs IRE Cricket Match Prediction, Where To Watch (Image Source: Google)
Advertisement

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் எட்டாவது டி20 உலக கோப்பை தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் வாழ்வா சவா ஆட்டத்தில் நியூசிலாந்து அணி அயர்லாந்தை எதிர்கொள்கிறது, 

சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 மற்றும் க்ரூப் 2 ஆகிய இரண்டிலுமே தலா 3 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு குரூப்களிலிருந்தும் தலா 2 அணிகள் அரையிறுதிக்கு முன்னேற முடியும். 

Trending


குரூப் 1இல் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளும் தலா 4 போட்டிகளில் விளையாடி தலா 5 புள்ளிகளை பெற்றுள்ளது. எனவே 3 அணிகளில் எந்த 2 அணிகள் கடைசி போட்டியில் வெல்லும் அந்த 2 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். 3 அணிகளுமே வேறு 3 அணிகளை எதிர்கொள்வதால் ஒருவேளை 3 அணிகளும் ஜெயிக்கும் பட்சத்தில் நெட் ரன்ரேட் அடிப்படையில் 2 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

அதன்படி நாளை அடிலெய்டில் நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து அணி கட்டாயம் வெல்லவேண்டிய சூழ்நிலையில் உள்ளது. கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் மழை காரணமாக அந்த அணியின் ஒரு வெற்றி கிடைக்காமல் போனது.

இருப்பினும் அந்த அணியின் ஃபின் ஆலன், டெவான் கான்வே, கிளென் பீலிப்ஸ், ஜிம்மி நீஷம் ஆகியோர் பேட்டிங்கிலும், ட்ரெண்ட் போல்ட், லோக்கி ஃபர்குசன், டிம் சௌதி ஆகியோர் பந்துவீச்சிலும் இருப்பதால் நிச்சயம் அயர்லாந்து அணிக்கெதிரான போட்டியில் அதிக ரன் ரேட் அடிப்படையில் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், மறுமுனையில் இருக்கும் அயர்லாந்து அணியும் நடப்பு சீசனில் சில பலம் வாய்ந்த அணிகளுக்கு அதிர்ச்சிவைத்தியம் அளித்துள்ளதை அவ்வளவு எளிதாக யாராலும் மறந்துவிட முடியாது. ஏனெனில் அந்த அணியிலும் அதிரடியான ஆட்டத்தையும், பந்துவீச்சாளர்கள் சிறப்பாகவும் செயல்பட்டு வருகின்றன. 

பேட்டிங்கை பொறுத்தவரையில் பால் ஸ்டிர்லிங், ஆண்டி பால்பிர்னி, ஹேரி டெக்டர், லோர்கன் டக்கர் ஆகியோரும், பேரி மெக்கர்த்தி, ஜோஷுவா லிட்டில், ஃபின் ஹேண்ட் ஆகியோரும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் நிச்சயம் அது நியூசிலாந்து அணிக்கு பெரும் தலைவாலியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - நியூசிலாந்து vs அயர்லாந்து
  • இடம் - அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட்
  • நேரம் - காலை 9.30 மணி (இந்திய நேரப்படி)

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 04
  • நியூசிலாந்து - 04
  • அயர்லாந்து - 0

உத்தேச லெவன்

நியூசிலாந்து - ஃபின் ஆலன், டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன் (கே), கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, இஷ் சோதி, லோக்கி ஃபர்குசன், டிரென்ட் போல்ட்

அயர்லாந்து - பால் ஸ்டிர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி (கே), லோர்கன் டக்கர் , ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், கரேத் டெலானி, மார்க் அடேர், பாரி மெக்கார்த்தி, ஃபியோன் ஹேண்ட், ஜோசுவா லிட்டில்,

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - டெவோன் கான்வே, லோர்கன் டக்கர், ஃபின் ஆலன்
  • பேட்டர்ஸ் - கேன் வில்லியம்சன், பால் ஸ்டிர்லிங், க்ளென் பிலிப்ஸ்
  • ஆல்-ரவுண்டர்கள் - மிட்செல் சான்ட்னர், கர்டிஸ் கேம்பர்
  • பந்துவீச்சாளர்கள் - டிம் சவுத்தி, ட்ரென்ட் போல்ட், ஜோசுவா லிட்டில்


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement