நியூசிலாந்து vs இலங்கை, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை: இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 ஆட்டம் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நாளை நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதில் நியூசிலாந்து அணி முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதேசமயம் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டி மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனால் இப்போட்டியில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Trending
அந்த அணியின் பேட்டிங்கில் ஃபின் ஆலன், டெவான் கான்வே, ஜேம்ஸ் நீஷம், கிளென் பிலீப்ஸ், மார்க் சாப்மேன் ஆகியோரும், பந்துவீச்சில் ட்ரெண்ட் போல்ட், லோக்கி ஃபர்குசன், இஷ் சோதி, மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் இருப்பது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
மறுமுனையில் இலங்கை அணி இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் இனி வரும் போட்டிகளில் அந்த அணி வெற்றிபெற்றால் மட்டுமே அரையிறுதி சுற்றில் நுழையும் என்பதால் இப்போட்டியின் மீது அந்த அணி பெரும் கவனத்தை செலுத்துகிறது.
அந்த அணியின் பேட்டிங்கில் குசால் மெண்டிஸ், சரித் அசலங்கா, பனுகா ராஜபக்ஷா ஆகியோரும், பந்துவீச்சில் லஹிரு குமாரா, வநிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்சனா ஆகியோரும் இருப்பது அந்த அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இலங்கை vs நியூசிலாந்து
- இடம் - சிட்னி கிரிக்கெட் மைதானம்
- நேரம் - மதியம் 1.30 மணி
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 18
- இலங்கை - 06
- நியூசிலாந்து - 10
- முடிவில்லை - 02
உத்தேச அணி
நியூசிலாந்து: டெவோன் கான்வே, ஃபின் ஆலன், கேன் வில்லியம்சன்(கே), க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, இஷ் சோதி, லாக்கி ஃபெர்குசன், டிரென்ட் போல்ட்
இலங்கை: குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்க/பதும் நிஷங்க, அஷேன் பண்டார, பானுக ராஜபக்ச, தசுன் ஷனக(கே), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்னே, மஹீஷ் தீக்ஷனா, பினுர பெர்னாண்டோ, லஹிரு குமார
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள்: குசல் மெண்டிஸ், டெவோன் கான்வே
- பேட்டிங்: தனஞ்சய டி சில்வா, ஃபின் ஆலன், க்ளென் பிலிப்ஸ், பதும் நிஷங்க
- ஆல்-ரவுண்டர்: வனிந்து ஹசரங்க, மிட்செல் சான்ட்னர்
- பந்துவீச்சு: மகேஷ் தீக்ஷனா, டிம் சவுத்தி, இஷ் சோதி
Win Big, Make Your Cricket Tales Now