
New Zealand's Blundell Ruled Out Of The ODI Series Against Pakistan (Image Source: Google)
18 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இதற்கான நியூசிலாந்து அணியிம் கராச்சி சென்றடைந்து பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டாம் பிளண்டல் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.
வங்கதேச அணிக்கெதிரான தொடரின் போது பிளண்டல் காயமடைந்தார். அவரது காயம் குணமடையாததால், அவர் இத்தொடரிலிருந்து விலகுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.