
New Zealand's Kane Williamson, BJ Watling Fit To Play WTC Final (Image Source: Google)
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வரும் 18ஆம் தேதி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடைபெறுகிறது.
இப்போட்டிக்கான 15 பேர் அடங்கிய அணிகளை இந்தியா, நியூசிலாந்து அறிவித்துள்ளது. மேலும் உலகின் முன்னணி டெஸ்ட் அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறனர்.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் போது காயமடைந்த நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன், பிஜே வாட்லிங் ஆகியோர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்பதை நியூசிலந்து கிரிக்கெட் வாரியம் உறுதிசெய்துள்ளது.