நாடு திரும்பிய போல்ட்; இங்கிலாந்து தொடரில் பங்கேற்பது சந்தேகம்!
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ட்ரெண்ட் போல்ட் தனி விமானம் மூலம் நாடு திரும்பினார்.

கரோனா பரவல் காரணமாக ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த வெளிநாட்டு வீரர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் வருகிற ஜூன் மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நியூசிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளதால், அவர்கள் மே 15ஆம் தேதி வரை இந்தியாவிலேயே தங்குவதற்கு முடிவு செய்துள்ளனர்.
ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்த ட்ரெண்ட் போல்ட் தனது குடும்ப உறுப்பினர்களை காண்பதற்காக தனி விமானம் மூலம் நியூசிலாந்து செல்ல உள்ளார்.
ஒருவேளை போல்ட் நியூசிலாந்து சென்றால், இங்கிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் அவரால் விளையாட முடியாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் இங்கிலாந்தின் கரோனா நெறிமுறைகள் காரணமாக வீரர்கள் தனிமைப்படுத்தபடுவர் என்பதால், ட்ரெண்ட் போல்ட்டால் பங்கேற்க இயலாது என தெரியவருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now