
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி இன்று இரவு 7 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது அணியின் கேப்டனாக இளம் வீரர் கே.எல் ராகுல் நியமிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்த இந்திய அணியில் கேப்டன் ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் நேற்று ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறினர். அதனை தொடர்ந்து இந்திய அணியின் புதிய கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த தொடர் முழுவதுமே அவர் கேப்டனாகவும், ஹார்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. இப்படி இந்திய அணியின் கேப்டனாக முதன்முறையாக செயல்பட உள்ள ரிஷப் பந்திற்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அதே வேளையில் தான் கேப்டன் பொறுப்பு ஏற்றது குறித்து ரிஷப் பண்ட்டும் தற்போது சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.