சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்?
அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பு சீசனுக்கு முதல் நாள் கேப்டன் பதவிக்கு வந்த ஜடேஜா, 8 போட்டிகள் முடிந்த பிறகு தனது பதவியை ராஜினாமா செய்தார். தோனிக்கும் அடுத்த சீசனில் 41 வயதாகி விடும் என்பதால், அவர் அணியில் இருப்பதே சிரமம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட நியமிக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சில பேர் சிஎஸ்கே வெளியிட்ட காணொளியில் அது தெளிவாகி இருப்பதாக கூறுகின்றனர்.
சிஎஸ்கே அணியின் மோசமான செயல்பாடு காரணமாக அந்த அணி தொடரை விட்டு வெளியேறிவிட்டது. இதனால் அடுத்த சீசனில் சிறப்பாக விளையாடவோம் என்றும், ரசிகர்கள் தங்களுக்கு எப்போதும் போல் ஆதரவு வாங்க வேண்டும் என்று ருத்துராஜ் கெய்க்வாட் அந்த காணொளியில் தோன்றி ரசிகர்களிடம் உரையாடினார்.
Trending
இதே போன்று 2020ஆம் ஆண்டு சென்னை தோற்ற போது, தோனி இதே ஸ்டைலில் பேசிய காணொளி உங்களுக்கு நினைவிருக்கலாம். இதனை வைத்து பார்த்தால் அடுத்த ஆண்டு ருத்துராஜ் தான் சிஎஸ்கேக்கு தலைமை தாங்குவார் என்றும் அதனால் தான் அவரை வைத்தே காணொளி சிஎஸ்கே வெளியிட்டுள்ளதாகவும் ரசிகர்கள் அடித்து கூறுகின்றனர்.
இந்த நிலையில், இன்றைய ஆட்டத்தின் முடிவில் தோனி எப்படியும் கிரிக்கெட் வர்ணணையாளர்களிடம் பேசும் போது, “நிச்சயமாக அடுத்த சீசனில் விளையாடுவேன். ஏனெனில் சென்னை ரசிகர்களுக்கு நேரில் நன்றி சொல்லாமல் செல்வது நியாயமாக இருக்காது. சென்னை மைதானத்தில் விளையாடாமல் மும்பையிலேயே விடைபெற்றுக் கொள்வது சென்னை ரசிகர்களுக்கு உகந்ததாக இருக்காது. வரும் சீசன்களில் அனைத்து மைதானங்களிலும் விளையாடும் போது அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் நன்றி சொல்லி விடை பெறுவதே சரியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now