
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை முதல் தொடங்கவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் உள்ள ஸாஹுர் அஹ்மத் சௌத்ரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்தே தீர வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது.
ஆனால் கேப்டன் ரோஹித் சர்மாவே அணியில் இடம்பெறாதது தான் பின்னடைவாக உள்ளது. அவருக்கு மாற்று வீரராக வந்துள்ள அபிமன்யூ ஈஸ்வரன் தான் தற்போது ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதுவரை எந்தவொரு ஐபிஎல் தொடரிலும் இவர் விளையாடாததால் இவரை பெயர் பெரும்பாலோனோருக்கு தெரிந்திருக்காது. இதே போல ஐபிஎல் ஏலத்திற்காக தனது பெயரை கூட அவர் பதிவு செய்யவில்லை. முழுக்க முழுக்க உள்ளூர் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருபவர்.
கடந்த 4 - 5 ஆண்டுகளாக ரஞ்சிக்கோப்பை போன்ற உள்நாட்டு தொடர்களில் மட்டுமே சிறப்பாக விளையாடி வந்த அவரை, இந்திய அணியில் வாய்ப்பு கொடுத்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இதற்கு காரணமும் வங்கதேசத்திற்கு எதிராக அவர் அடித்த ரன்கள் தான். வங்கதேச ஏ அணியுடனான டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணியை வழிநடத்திய அபிமன்யு 2 போட்டிகளில் 299 ரன்களை குவித்தார். இதனால் தான் அவர் இந்திய சீனியர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.