 
                                                    
                                                        No Indian in ICC Men's ODI Team of 2021; Babar Azam named captain (Image Source: Google)                                                    
                                                சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2021ஆம் ஆண்டிற்கான சிறந்த ஒருநாள் அணியைத் தேர்வு செய்து இன்று வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு சிறப்பாக விளையாடிய வீரர்கள் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளார்கள்.
பாகிஸ்தானின் பாபர் அஸாம் தலைமையிலான இந்த அணியில் எந்தவொரு இந்திய வீரருக்கும் இடம் கிடைக்கவில்லை. ஐசிசி நேற்று வெளியிட்ட 2021-ம் ஆண்டுக்கான டி20 அணியிலும் இந்திய வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை.
மேலும் இந்த ஒருநாள் அணியில் பாகிஸ்தான், அயர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்கதேச அணி வீரர்களே அதிகளவில் இடம்பெற்றுள்ளார்கள்.
 
                         
                         
                                                 
                         
                         
                         
                        