
No Long Time Goals, Happy To Contribute To Team’s Victory – Sanju Samson (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
போட்டி முடிந்த பிறகு பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், "இந்த விக்கெட் சற்று வித்தியாசமாக இருந்தது. டெஸ்ட் மேட்சை போல குட் லெந்தில் பந்து வீசுவது வேகபந்துவீச்சாளர்களுக்கு பெரிதும் உதவியது. நாங்கள் நீண்ட கால இலக்குகள் வைத்துக்கொள்ள போவதில்லை. முடிந்தவரை அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற முயற்சிப்போம்.
இந்த சீசனுக்கு முன் நான் எனது உடற்தகுதியிலும், சூழல்களை புரிந்து கொள்வதிலும் தான் கவனம் செலுத்தினேன். இனி முடிந்தவரை பொறுமையாக விக்கெட் விடாமல் விளையாட முயற்சிப்பேன். ஏனென்றால், பிறகு எப்போது வேண்டுமானாலும் நான் ஆட்டத்தின் வேகத்தை கூட்டலாம்.