வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிளவு ஏற்படுத்த முயற்சி: வாரியத் தலைவர் குற்றச்சாட்டு
வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிளவு ஏற்படுத்த முயற்சி நடப்பதாக அந்த அணியின் கிரிக்கெட் வாரியத் தலைவர் கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 டெஸ்டுகளில் விளையாடுகிறது. டி20 தொடர் ஜனவரி 23 முதல் ஜனவரி 31 வரை நடைபெறுகிறது. டெஸ்ட் தொடர், மார்ச் 8 முதல் மார்ச் 28 வரை நடைபெறுகிறது. முதல் மூன்று ஆட்டங்களின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் பேசிக்கொண்ட ஆடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் கசிந்ததாகக் கூறப்படுகிறது. அணி வீரர்களிடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
Trending
இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரிக்கி ஸ்கெரிட் கூறுகையில், “மூன்று அற்புதமான வெற்றிகளை அடைந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மற்றும் கேப்டன் பொல்லார்ட் மீது வன்மத் தாக்குதல் நிகழ்த்தி, அணியில் பிளவை ஏற்படுத்தும் விதை தூவப்பட்டுள்ளது.
கேப்டன் பொல்லார்டுக்குக் கெட்டப் பெயரை உண்டாக்கவும் டி20 தொடரில் நன்றாக விளையாடி வரும் அணியின் வெற்றிப் பயணத்தைத் தடுக்கவும் முயற்சி நடைபெற்றுள்ளது. இதை நாங்கள் ஏற்க மாட்டோம்” எனக் கூறியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அணியின் கேப்டனுக்கும் எந்தவொரு வீரருக்கும் இடையே கருத்து வேறுபாடும் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now