
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நேற்று(டிசம்பர் 16) தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடியது.
இதில் ஆஸ்திரேலிய அணி 473 ரன்களை குவித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இதையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆடிவருகிறது.
ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸில் மார்கஸ் ஹாரிஸின் கடினமான கேட்ச்சை அபாரமாக பிடித்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர், அதன்பின்னர் மார்னஸ் லபுசாக்னே 2 கேட்ச்களை கோட்டைவிட்டார். இன்னிங்ஸின் 35ஆவது ஓவரில் லபுசாக்னே 21 ரன்னில் இருந்தபோது கொடுத்த சற்று சவாலான கேட்ச் வாய்ப்பை தவறவிட்ட ஜோஸ் பட்லர், 95 ரன்னில் களத்தில் இருந்தபோது கொடுத்த எளிதான கேட்ச்சையும் கோட்டைவிட்டார்.