
கடந்த 2020ஆம் ஆண்டு ஆஸ்திரேலியத் தொடரிலிருந்து ரஹானேவின் பேட்டிங் ஃபார்ம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரில் அடிலெய்டில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அந்தப் போட்டியில் ரஹானே 42, 0 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.
மெல்பர்னில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்டில் ரஹானே சதம்(112, 27), சிட்னியில் நடந்த போட்டியில் (22, 4), காபா நடந்த டெஸ்டில் ரஹானே 37, 24 என சொல்லிக்கொள்ளும் வகையில் ரன்கள் அடிக்கவில்லை. ஒரே ஒரு சதத்தை மட்டும் அடித்து அணியில் நீடித்தார்.
இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவில் நடந்தடெஸ்ட் தொடரிலும் ரஹானே சொதப்பலாக பேட்டிங் செய்தார். சென்னையில் நடந்த இரு டெஸ்ட் போட்டிகளில் ரஹானே முதல் டெஸ்டில்(1,0), 2ஆவது டெஸ்டில்(67, 10) என அடித்தார். அகமதாபாத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் (7 ரன்கள்) 4ஆவது டெஸ்டில் 27 ரன்கள் மட்டுமே ரஹானே சேர்த்தார்