நாங்கள் மனதளவில் தயாராக உள்ளோம் - அஜிங்கியா ரஹானே
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடியது நியூசிலாந்துக்கு சாதகமாக இருந்தாலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு நாங்கள் மனதளவில் தயாராக உள்ளோம் என இந்திய அணியின் துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நாளை மறுநாள் இங்கிலாந்திலுள்ள சவுத்தாம்ப்டனி நடைபெறுகிறது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடியது நியூசிலாந்துக்கு சாதகமாக இருந்தாலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு நாங்கள் மனதளவில் தயாராக உள்ளோம் என இந்திய அணியின் துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார்.
Trending
இதுகுறித்து பேசிய ரஹானே,“நியூசிலாந்து தரம் வாய்ந்த அணி. நாங்கள் அவர்களைக் குறைத்து மதிப்பிடவில்லை. இறுதிப் போட்டிக்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிராக 2 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடியுள்ளனர். அது அவர்களுக்கு சாதகமானது.
ஆனால், அடுத்த 5 நாள்களுக்கு ஒவ்வொரு செஷனிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதைப் பொறுத்துதான் இறுதி ஆட்டத்தின் வெற்றியாளர் யார் என்பது தீர்மானமாகும். அனைத்தும் மனதைப் பொறுத்துதான் என்று எனக்கு தோன்றுகிறது. மனதளவில் தயார்படுத்தி சூழலுக்கு ஏற்ப மாறிக்கொள்ள வேண்டும். அதுதான் முக்கியம்.
ஒரேயொரு இறுதி ஆட்டம்தான். ஆனால், இதை இறுதி ஆட்டமாக இல்லாமல் மற்றொரு ஆட்டமாகத்தான் பார்ப்போம். எங்கள் மீது நாங்களே அழுத்தம் செலுத்திக்கொள்ள மாட்டோம். சிறப்பான தொடக்கத்தை அமைக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். நாங்கள் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம்.
அணியில் இளம் வீரர்களுக்கு எதுவும் சொல்லவில்லை. அவர்களுடைய ஆட்டத் திட்டம் அவர்களுக்குத் தெரியும். ஒன்று, ஒன்றரை ஆண்டுகள் சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்தியுள்ளோம் என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்களுக்கும் நம்பிக்கையுள்ளது. அவர்களுடைய திறன் மீது எங்களுக்கும் நம்பிக்கையுள்ளது. அவர்களுடைய ஆட்டத்தை வெளிப்படுத்த நாங்கள் அனுமதிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now