Advertisement

நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, முதல் டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!

நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை வெலிங்டனில் நடைபெறவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan February 28, 2024 • 20:34 PM
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, முதல் டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, முதல் டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்! (Image Source: Google)
Advertisement

ஆஸ்திரேலிய அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்று 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி முழுமையாக கைப்பற்றியதுடன், நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடாரின் முதல் போட்டி நாளை வெலிங்டனில் நடைபெறவுள்ளது. இரு அணியிலும் சமபலம் வாய்ந்ததாக பார்க்கப்படுவதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் - நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா
  • இடம் - பேசின் ரிசர்வ், வெலிங்டன்
  • நேரம் - அதிகாலை 3.30 மணி (இந்திய நேரப்படி)

பிட்ச் ரிப்போர்ட்

வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்தின் ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த மைதானத்தில் முதல் இரண்டு நாள்கள் பேட்டர்களுக்கு சாதகமாக அமையும் என்பதால் அதனை பயன்படுத்தி பேட்டர்கள் ஸ்கோரை குவிக்கலாம். மேலும் இப்போட்டியின் கடைசி இரண்டு நாள்கள் மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதால் பேட்டர்கள் தடுமாறக்கூடும்.இதனால்இப்போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றி வழிவகுக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 61
  • நியூசிலாந்து - 08
  • ஆஸ்திரேலியா - 34
  • முடிவில்லை - 18

நேரலை

நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரலையில் கண்டுகளிக்கலாம்.

உத்தேச லெவன்

நியூசிலாந்து: வில் யங், டாம் லேதம், ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், டாம் பிளண்டெல், மிட்செல் சான்ட்னர், டிம் சௌதீ (கே), மேட் ஹென்றி, ஸ்காட் குகெலிஜ்ன்.

ஆஸ்திரேலியா: உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கே), மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன், ஜோஷ் ஹசில்வுட்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: டாம் ப்ளன்டெல்
  • பேட்டர்ஸ்: கேன் வில்லியம்சன் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, டேரில் மிட்செல், டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித்
  • ஆல்-ரவுண்டர்கள்: மிட்செல் மார்ஷ் (துணை கேப்டன்), மிட்செல் சான்ட்னர், ரச்சின் ரவீந்திரா
  • பந்துவீச்சாளர்கள்: மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement