Advertisement

நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!

நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை ஆக்லாந்தில் நடைபெறுகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan February 24, 2024 • 13:38 PM
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
Advertisement

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை ஆக்லாந்தில் நளை நடைபெறவுள்ளது. நியூசிலாந்து அணி ஏற்கெனவே சொந்த மண்ணில் டி20 தொடரை இழந்துள்ளதால், நாளைய போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் தொடரை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணியும் முழுமையாக தொடரை கைப்பற்ற முயற்சிக்கும் என்பதிலும் சந்தேகமில்லை

Trending


போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா
  • இடம் - ஈடன் பார்க், ஆக்லாந்து
  • நேரம் - காலை 5.30 மணி (இந்திய நேரப்படி)

பிட்ச் ரிப்போர்ட்

ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தின் ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமான ஆடுகளமாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்த மைதானத்தில் பந்துவீச்சாளர்களுக்கு எந்தவித உதவியும் கிடைக்காது. இதனால் இப்போட்டியில் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றி வழிவகுக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 17
  • நியூசிலாந்து - 06
  • ஆஸ்திரேலியா - 11

நேரலை

நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரலையில் கண்டுகளிக்கலாம்.

உத்தேச லெவன்

ஆஸ்திரேலியா: டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் மார்ஷ்(கே), கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட், பாட் கம்மின்ஸ், நாதன் எல்லிஸ், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்

நியூசிலாந்து: ஃபின் ஆலன், ரச்சின் ரவீந்திரா, வில் யங், கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், ஜோஷ் கிளார்க்சன், மிட்செல் சான்ட்னர்(கே), ஆடம் மில்னே, லோக்கி ஃபெர்குசன், டிரென்ட் போல்ட், பென் சியர்ஸ்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: ஃபின் ஆலன், ஜோஷ் இங்கிலிஸ்
  • பேட்டர்ஸ்: டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட்(கேப்டன்), கிளென் பிலிப்ஸ்
  • ஆல்-ரவுண்டர்கள்: கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் சான்ட்னர், ரச்சின் ரவீந்திரா (துணை கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள்: ஆடம் ஸாம்பா, லோக்கி ஃபெர்குசன்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement