
NZ vs BAN, 1st Test: Bangladesh batters continues their dominant performance on Day 3 (Image Source: Google)
நியூசிலாந்து - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பே ஓவல் மைதானத்தில் ஜவனரி 1ஆம் தேதி தொடங்கியது.
இதில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த வங்கதேச அணி 328 ரன்களில் நியூசிலாந்தை கட்டுப்படுத்தியது. நியூசிலாந்து அணி தரப்பில் டேவன் கான்வே 122 ரன்களைச் சேர்த்தார்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணி 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 2 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து 153 ரன்கள் பின் தங்கிய நிலையில் வங்கதேச அணி நாளை 3ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.