Advertisement

நியூசிலாந்து vs இங்கிலாந்து, இரண்டாவது டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (டிசம்பர் 6) வெல்லிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Advertisement
நியூசிலாந்து vs இங்கிலாந்து, இரண்டாவது டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து vs இங்கிலாந்து, இரண்டாவது டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 05, 2024 • 01:04 PM

New Zealand vs England 2nd Test Dream11 Prediction: இங்கிலாந்து அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இத்தொடரில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை பெற்றுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
December 05, 2024 • 01:04 PM

இதையடுத்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (டிசம்பர் 6) வெல்லிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே நியூசிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியை இழந்துள்ள நிலையில், அதற்கான பதிலடியை இப்போட்டியில் கொடுக்கும் முனைப்புடன் களமிறங்கவுள்ளது. அதேசமயம் இங்கிலாந்து அணி இப்போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்ற முயற்சிக்கும். இதனால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.  

Trending

NZ vs ENG 2nd Test: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - நியூசிலாந்து vs இங்கிலாந்து
  • நேரம் - அதிகாலை 3:30 மணி (இந்திய நேரப்படி)
  • இடம் - பேசின் ரிசர்வ் கிரிக்கெட் மைதானம், வெல்லிங்டன்

NZ vs ENG 2nd Test Pitch Report

நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் போட்டி வெல்லிங்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை 71 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 16 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளும், 29 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணியும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 315 ரன்களாகவும், கடைசி இன்னிங்ஸ் சராசரி 140 ரன்களாகவும் உள்ளன. மேலும் இந்த மைதானத்தில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 680 ரன்களாக உள்ளது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வது வெற்றிக்கு வழி வகுக்கலாம். 

NZ vs ENG 2nd Test: Where to Watch?

நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரை இந்திய ரசிகர்கள் அமேசன் பிரையம் ஓடிடி தளத்தில் நேரலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

NZ vs ENG Test Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 113
  • நியூசிலாந்து - 13
  • இங்கிலாந்து - 53
  • முடிவில்லை - 47

New Zealand vs England 2nd Test Probable Playing XI

நியூசிலாந்து பிளேயிங் லெவன்: டாம் லாதம் (கேப்டன்), டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் ப்ளன்டெல், கிளென் பிலிப்ஸ், நாதன் ஸ்மித், டிம் சௌதி, மேட் ஹென்றி, வில் ஓ ரூர்க்.

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஜேக்கப் பெத்தேல், ஜோ ரூட், ஹாரி புரூக், ஒல்லி போப், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ், சோயிப் பஷீர்.

NZ vs ENG 2nd Test Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ஒல்லி போப், டாம் பிளெண்டல்
  • பேட்ஸ்மேன்கள் - பென் டக்கெட், ஹாரி புரூக் (கேப்டன்), கேன் வில்லியம்சன், டெவான் கான்வே (துணைக்கேப்டன்)
  • ஆல்-ரவுண்டர்கள் - கிளென் பிலீப்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட்
  • பந்துவீச்சாளர்கள் - வில்லியம் ஓ ரூர்க், பிரைடான் கார்ஸ்

NZ vs ENG 2nd Test Dream11 Prediction, NZ vs ENG Dream11 Prediction, Today Match NZ vs ENG, NZ vs ENG Test Series, NZ vs ENG Dream11 Team, Fantasy Cricket Tips, NZ vs ENG Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between New Zealand vs England

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement