Advertisement

NZ vs PAK, 1st T20I: வில்லியம்சன், மிட்செல் அரைசதம்; பாகிஸ்தானுக்கு 227 டார்கெட்!

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 227 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan January 12, 2024 • 13:29 PM
NZ vs PAK, 1st T20I: வில்லியம்சன், மிட்செல் அரைசதம்; பாகிஸ்தானுக்கு 227 டார்கெட்!
NZ vs PAK, 1st T20I: வில்லியம்சன், மிட்செல் அரைசதம்; பாகிஸ்தானுக்கு 227 டார்கெட்! (Image Source: Google)
Advertisement

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று ஆக்லாந்திலுள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கெப்டன் ஷாஹின் அஃப்ரிடி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். 

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஃபின் ஆலன் - டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டெவான் கான்வே ரன்கள் ஏதுமின்றி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் ஒருமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் அதிரடியாக விளையாடிய ஃபின் ஆலன் பாகிஸ்தான் பந்துவீச்சில் பிரித்துமேய்ந்தார். 

Trending


இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபின் ஆலன் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 35 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் வில்லியம்சன்னுடன் இணைந்த டேரில் மிட்செலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேன் வில்லியம்சன் அரைசதம் கடந்த கையோடு 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இருப்பினும் மறுமுனையில் அதிரடியைக் கைவிடாத டேரில் மிட்செல் 22 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவுசெய்து மிரட்டினார். இதற்கிடையில் கிளென் பிலீப்ஸ் 19 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதுவரை அதிரடியாக விளையாடி வந்த டேரில் மிட்செலும் 4 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 61 ரன்களைச் சேர்த்த நிலயில் விக்கெட்டை இழந்தார். 

இறுதியில் அதிரடி காட்டிய மார்க் சாப்மேன் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 26 ரன்களை எடுத்த ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்களைக் குவித்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் கேப்டன் ஷாஹீன் அஃப்ரிடி, அப்பாஸ் அஃப்ரிடி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ராவுஃப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement