NZ vs PAK, 1st T20I: நியூசிலாந்து பவுலர்கள் அபாரம்; பாகிஸ்தான் 91 ரன்களில் ஆல் அவுட்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 91 ரன்களில் ஆல் அவுட்டானது.

NZ vs PAK, 1st T20I: நியூசிலாந்து பவுலர்கள் அபாரம்; பாகிஸ்தான் 91 ரன்களில் ஆல் அவுட்! (Image Source: Google)
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரான இன்று தொடங்கியது.
இதனால் அந்த அணி 11 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த கேப்டன் சல்மான் ஆகா மற்றும் குஷ்தில் ஷா இணை ஓரளவு தக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் 18 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, 32 ரன்களை எடுத்திருந்த குஷ்தில் ஷாவு தனது விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அப்துல் சமாத் 7 ரன்களுக்கும், ஜஹாந்தத் கான் 17 ரன்னிலும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களாலும் நியூசிலாந்து பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.
Also Read: Funding To Save Test Cricketஇதனால் பாகிஸ்தான் அணி 18.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 91 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜேக்கப் டஃபி 4 விக்கெட்டுகளையும், கைல் ஜேமிசன் 3 விக்கெட்டுகளையும், இஷ் சோதி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 92 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி விளையாடவுள்ளது.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News