Advertisement
Advertisement
Advertisement

நியூசிலாந்து vs பாகிஸ்தான், 3ஆவது டி20 - போட்டி மூன்னோட்டாம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை டுனெடினில் உள்ள ஓவல் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெறுகிறது.

Advertisement
நியூசிலாந்து vs பாகிஸ்தான், 3ஆவது டி20 - போட்டி மூன்னோட்டாம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நியூசிலாந்து vs பாகிஸ்தான், 3ஆவது டி20 - போட்டி மூன்னோட்டாம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: CricketNmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 16, 2024 • 02:15 PM

பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றிபெற்ற 2-0 என்ற கணக்கில் தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை வகித்துள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
January 16, 2024 • 02:15 PM

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை டுனெடினில் உள்ள ஓவல் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே முதலிரண்டு போட்டியிலும் நியூசிலாந்து வெற்றிபெற்று அசத்தியுள்ளது, முதல் வெற்றிக்காக பாகிஸ்தான் அணி கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், காயம் காரணமாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தொடரிலிருந்து விலகியுள்ளது நியூசிலாந்துக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Trending

போட்டி தகவல்கள்

  •     மோதும் அணிகள் - நியூசிலாந்து vs பாகிஸ்தான்
  •     இடம் - ஓவல் பல்கலைக்கழக மைதானம், டுனெடின்
  •     நேரம் - காலை 5.30 மணி (இந்திய நேரப்படி)

நேரலை

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடரை இந்திய ரசிகர்கள் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரத்தில் கண்டுகளிக்கலாம்.

நேருக்கு நேர்

  •     மோதிய போட்டிகள் - 36
  •     நியூசிலாந்து -15
  •     பாகிஸ்தான் - 20
  •     முடிவில்லை - 01

பிட்ச் ரிப்போர்ட்

டுனெடினில் உள்ள ஓவல் பல்கலைக்கழக மைதானம் வரலாற்றில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் இங்கு பந்து பேட்டிற்கு வரும் என்பதால் நிச்சயம் இப்போட்டியில் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. மேலும் இங்கு டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வித்திடலாம். அதேசமயம் முதலில் பேட்டிங் செய்யும் அணி 180 முதல் 200 ரன்களை எடுத்தால் மட்டுமே வெற்றியை எட்ட முடியும்.

உத்தேச லெவன்

நியூசிலாந்து: டெவான் கான்வே, ஃபின் ஆலன், டிம் செய்ஃபெர்ட், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், டிம் சௌதி, ஆடம் மில்னே, இஷ் சோதி, பென் சியர்ஸ்.

பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், சைம் அயூப், பாபர் ஆசாம், ஃபகர் ஸமான், ஆசம் கான், இஃப்திகார் அகமது, அமீர் ஜமால்/ முகமது நவாஸ், ஷாஹீன் அஃப்ரிடி (கே), ஹாரிஸ் ரவுஃப், உசாமா மிர், அப்பாஸ் அஃப்ரிடி.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  •     விக்கெட் கீப்பர்: டெவான் கான்வே, முகமது ரிஸ்வான், டிம் செய்ஃபெர்ட்
  •     பேட்டர்ஸ்: ஃபின் ஆலன், பாபர் ஆசாம்,  ஃபகர் ஸமான்
  •     ஆல்-ரவுண்டர்கள்: டேரில் மிட்செல், இஃப்திகார் அகமது
  •     பந்துவீச்சாளர்கள்: ஷஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ராவுஃப், டிம் சௌதீ

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement