
NZ vs SA, 2nd Test: Erwee, Markram put visitors in dominating position (Stumps, Day 1) (Image Source: Google)
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கிறிஸ்ட்சர்ஜில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் கேப்டன் டீன் எல்கர் - சரேல் எர்வீ இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் டீன் எல்கர் 41 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஐடன் மார்க்ரம் 42 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.