
கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வரும் 2ஆவது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, 133 ஓவர்களில் 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. எர்வீ 108 ரன்கள் எடுத்தார். மேட் ஹென்றி 3 விக்கெட்டுகளையும் வாக்னர் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
அதைத்தொடர்ந்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 80 ஓவர்களில் 293 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மிட்செல் 60, காலின் டி கிராண்ட்ஹோம் 120 ரன்கள் எடுத்தார்கள். ரபாடா 5 விக்கெட்டுகளையும் ஜான்சென் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
தென் ஆப்பிரிக்க அணி 2ஆவது இன்னிங்ஸிலும் சிறப்பாக விளையாடி 100 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 354 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. விக்கெட் கீப்பர் கைல் வெர்ரெய்ன் 136 ரன்களும், ரபாடா 47 ரன்களும் எடுத்தார்கள். இதனால் 2ஆவது டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை வெல்ல நியூசிலாந்து அணிக்கு 426 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.